பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் பால் வழங்க கர்நாடக அரசு முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 11, 2015

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் பால் வழங்க கர்நாடக அரசு முடிவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இனி, ஐந்து நாட்களுக்கு பால் வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, மூன்று நாட்கள் பால் வழங்கப்படுகின்றன.

வாசனை பால் வெறும் பாலாக வழங்குவதை விட, வாசனை பால் வழங்கும்படி, மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனால், ஷிர பாக்யா திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் பால், வாரத்தில், ஐந்து நாட்கள் வழங்குவது என்றும், வாசனை பாலாக - ப்ளாவர்ட் மில்க் வழங்கும்படியும் முதல்வர் சித்தராமையா, கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment