ஆய்வு கூட்டத்துக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 16, 2015

ஆய்வு கூட்டத்துக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆய்வு கூட்டத்துக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலாண்டு தேர்வு குறித்த மீள் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதை புறக்கணித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு முடித்த பிறகே, ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், ஆசிரியர்கள் முழுமையாக பாடங்களை நடத்தாத நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், கரூர் மாவட்டம் நல்ல தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது: கரூர், தாந்தோணி, குளித்தலை ஆகிய வட்டாரத்தில் உள்ள, பிளஸ் 2 ஆசிரியர்கள், 150 பேர் ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு, ஒரு சங்கத்தை சேர்ந்த, 50 ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காலாண்டு தேர்வு முடித்த நிலையில், முடித்த பாடங்கள் பற்றிய விவரம், மாணவ, மாணவியரின் நிலைமை, தேர்ச்சி விகிதம் போன்றவைகளை கலந்து ஆய்வு செய்யவே கூட்டம் நடத்தப்படுகிறது.ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக ஆய்வு கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment