ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான, மூன்றாம் பருவ தேர்வுகள், ஏப்., 22 முதல் துவங்கவுள்ளன.
தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ தேர்வுகள் தள்ளிவைப்பு, ஆசிரியர்கள் போராட்டம் போன்றவற்றால், மூன்றாம் பருவ பாடங்கள் கற்பித்தலுக்கு போதிய அவகாசம் இல்லாமல் போனது. அவசரகதியில், தற்போது மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவ தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,
ஏப்., 22ம் தேதி தமிழ்,
ஏப்., 25ல் ஆங்கிலம்,
26ல் கணிதம்,
27ல் அறிவியல்,
28ல் சமூகவியல்,
29ல் உடற்கல்வி தேர்வுகள் நடக்கவுள்ளன.
ஏப்.,30 க்கு பின், கோடை விடுமுறை துவங்குகிறது.
No comments:
Post a Comment