மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 24, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஹோலி பண்டிகை பரிசாக அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கும், நிதித்துறை அமைச்சகத்தின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.
இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.

No comments:

Post a Comment