இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச வைபை சேவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 6, 2016

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச வைபை சேவை

கேரளாவில் அரசு துறையில் பெரும்பாலான சேவைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு சேவைகளை அவர்கள் மிக எளிதாக பெற முடிகிறது.இதனால் இந்தியாவிலேயே முதல் ‘டிஜிட்டல்’ மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதை முறைப்படி அறிவித்து கேரள அரசை பாராட்டினார்.இந்த நிலையில் அடுத்த மைல் கல்லாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச ‘வைபை’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்தி இந்த ‘வைபை’ சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சேவையும் இந்தியாவிலேயே முதல் முறையாக இங்குதான் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி தலைமை செயலகத்தில் உள்ள வடக்கு பிளாக்கில் மட்டும் செயல்படும். விரைவில் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் இலவச ‘வைபையை’ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் 30 நிமிடங்கள் மட்டும் பயன்படுத்தலாம். மேலும் எந்தெந்த இணையதளங்களை யார் யார் பயன்படுத்துக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் வசதி உள்ளதால் இதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது.

No comments:

Post a Comment