உச்சக்கட்ட கொடுமை...!
16.05.2016 அன்று நமது சகோதரி ஒருவர், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி எண் 234, GHSS, பெரியப்பட்டியில் Presiding Officerஆக பணியாற்றியுள்ளார். தேர்தல் முடிந்து சுமார் 10 மணியளவில் அவரது பூத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பெறப்பட்டது. சரிபார்த்து பெற்றவர் Zonal ஆகப் பணிபுரிந்த பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ...... என்பவர். நமது சகோதரி பணி முடித்து, சுமார் 12 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், சரியாக நள்ளிரவு12.52 மணிக்கு Zonal பாலக்கோடு கூ.உ.தொ.க. யிடம் இருந்து ஒரு மிஸ்டு கால்(?) வந்துள்ளது. உடனே சகோதரி அவரிடம் போன் செய்து என்னவென்று கேட்க, நீங்கள் 17(C) form 3 பிரதிக்குப் பதிலாக, ஒரே ஒரு பிரதி தான் கொடுத்துள்ளீர்கள். உடனடியாக தரும்புரி மாவட்ட ஆட்சியரகம் வந்து தரவும் எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். ஆவணங்களைப் பெறும் போதே தேவையானவற்றை கேட்டுப் பெறாமல், நள்ளிரவில் போன் செய்து அவரை மிரட்டியுள்ளார். 17(C) ஐ அவர் வீட்டிலா வைத்திருப்பார். அதன் பிறகு பல முறை போன் செய்தும் மதிப்புமிகு Zonal போனையே எடுக்கவில்லை. பதறிப் போன நமது சகோதரி, சுமார் 50 கி.மீ. தொலைவிலிருந்து, ரூ. 2000/ க்கு வாடகைக் கார் பேசி, பதறியடித்து தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் விரைந்துள்ளார். அங்கு சென்ற பின்னும் போன் செய்த பொழுது Zonal ன் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுருந்தது. அதன் பின் சுமார் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்த RO ஒருவரிடம் தகவல் தெரிவித்து, தயார் செய்த படிவங்களை அவரிடம் கொடுத்து விட்டு காலை 6 மணியளவில் கடும் மன உளைச்சலுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
பொறுப்பற்ற முறையிலும், கடமையை சரிவரச் செய்யாமலும், பெண் ஒருவருக்கு 12.50 க்கு போன் செய்து மிரட்டியும், அதன் பின் பெண் ஆசிரியரின் போனை அட்டெண்ட் பண்ணாமலும் கடுமையான மன உளைச்சலும், கடும் அலைச்சலும், நள்ளிரவில் கடும் நெருக்கடியும் கொடுத்துள்ள அந்த பாலக்கோடு கூ.உ.தொ.க. அலுவலரின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நபர்கள் Zonal போன்ற முக்கியமான பொறுப்புகளை பெற்று அலைகழிக்கப்பட்டதை தமிழகம் முழுவதும் பார்த்தோம்... இனி வரும் காலங்களில், இவரைப் போன்றவர்கள் தாமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது புகாரின் பேரில் ஒதுக்கித் தள்ள வேண்டும்.
என்ன செய்யலாம் இவர்களைப் போன்ற அரைகுறை அலுவலர்களை?
what App பகிர்வு செய்தி
தேர்தல் பணிக்குச்சென்ற பல ஆசிரியர்களுக்கு நடந்த கொடூரம் இதுதான். தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களுக்கு மை வைக்க ஒரு குச்சியை உடன் தருவார்கள். அந்த குச்சியின் நீளமும் அளிக்கப்பட்ட மை குப்பியின் உயரமும் ஒரு மி.மீ கூட வித்தியாசப்படாது. விளைவு குச்சி குப்பியினுள் முழுவதும் சென்றுவிடும். ஒவ்வொரு முறை மை எடுக்கும் போதும் வாக்காளருக்கு பூசும் மையை விட இவரின் கை விரல்களில் மை பூசப்படும்.. இதன் பக்க விளைவுகள் அறிகுறி 4 மணி நேரத்திலேயே தெரியும் , கை விரல் தோல் கருகும் வரண்டுவிடும். சுமார் 15 நாட்களுக்கு இந்த வரட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் உடல் உறுப்புகளிலேயே மிகவும் உணர் நரம்புகள் உடைய கைவிரல்களில் இந்த பாதிப்பை சற்று யோசித்து பாருங்கள். 15 நாட்களுக்கு பிறகு தானாக சரியாகாது இப்பகுதியில் உள்ள தோல் காய்ந்து , பாதிக்கப்பட்ட இறந்த செல்கள் உதிர்ந்து தோல் பிரிந்து புதிய செல்கள் உண்டானால்தான் இப்பாதிப்பு முற்று பெறும். பல கோடி தேர்தல் செலவு கணக்கு காட்டும் தேர்தல் ஆணையம் இக்குச்சியில் நீளத்தை பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகரிக்க வேண்டும். அல்லது தேர்தல் பணியாளர்களுக்கு கை உறைகளை வழங்க வேண்டும். அடுத்த தேர்தலிலாவது இதனை நிவர்த்தி செய்வார்களா? #TNElectionsCEO #TNElections #TNElections2016
ஆசிரியர் : ஜெகன்நாதன்.
இனி வருங்காலங்களில் தேர்தல் நேரம் முடிந்து அதிகப்பட்சம் 1 மணி நேரத்தில் பொருட்களை ஒப்படைத்து செல்லும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு அலுவலரை நியமிக்க ஏற்பாடு செய்வதற்கு நமது தேர்தல் ஆணையத்தை நாம் வலியுறுத்த வேண்டும். பழைய முறை அப்படியே தொடர வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆசிரியர் : பொன் மோகன்
தேர்தல் சிறப்பு பார்வை.
தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரிகள் பல நூறு கோடிகள் செலவு செய்து தேர்தல் நடத்துகின்றார்கள். அவ்வளவு ரூபாய் செலவு செய்பவர்கள் வீணாக பாதி பணம் செலவு செய்கின்றார்கள் அது அவர்களுக்கு தெரிகின்றதா? இல்லையா? தெரியலா .
தேர்தல் நடத்துகின்ற அரசு
இனிவரும் காலங்களில் ஆவாது பின்வரும் பிரச்சனைகளை நடைமுறைபடுத்தினால் நன்றாக இங்கும்.
1 .ஆசிரியர்களை நீண்ட தூரம் தேர்தல் பயிற்சிக்கு அனுப்ப கூடாது.
2. பெண் ஆசிரியர்களை அந்தந்த ஒன்றியத்திலேயே / பணிபுரியும் பஞ்சாயத்து மற்றும் குடியிருக்கும் பஞ்சாயத்து தவிர்த்து மற்ற பஞ்சாயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுதப்பட வேண்டும்.
3. ஒவ்வொரு நாள்தேர்தல் பயிற்சிக்கும் உணவுப் படி, பயணம்படி வழங்க வேண்டும்.
4. ஆண் ஆசிரியர்களை பக்கத்து ஒன்றியத்தல் பணியில் அமர்த்தலாம்.
5. பூத்தில் பயன் உள்ள முக்கிய படிவங்கள் தவிர மற்ற படிவங்கள் தவிர்கவும்
6 வீணான படிவங்கள் பூத்திற்கு கொடுக்க கூடாது.
ஆசிரியர்கள் முக்கியமாக பெண் ஆசிரியைகள் நேற்று தேர்தல் பணி முடித்து திரும்ப சொந்த ஊருக்கு வீட்டுக்கு செல்ல அவர்கள் பட்ட கஷ்டம் வேதனைதேர்தல் கமிஷனுக்கு எப்படி தெரியும் நேரில் பார்த்திருந்தால் தெரியும், சில பூத் எடுக்க இரவு 1.00 மணி அதன் பிறகு எப்படி வீட்டுக்கு செல்வது, ஒரு சில பூத் 10.00 மணிக்கு எடித்திருந்தாலும் எப்படி பஸ் பிடித்து 100 கி.மீ தூரம் செல்வது, அங்கிருந்து ஒரு சில கிராமத்துக்கு எப்படி செல்வார்கள். இவை அனைத்தும் தேர்தல் தலைமைக்கு தெரிய வேண்டும்.
இவ்வளவு வேலை வாங்கிக் கொண்டு 1300 / 1700 கொடுதல் எப்படி சரி இனி வரும் காலங்களில் இந்த பணிக்கு Basic pay யில் பாதி பணம் கொக்க வேண்டும்.
மேற்கண்ட உண்மையான நியாயமான பிரச்சனைகளை தேர்தல் அதிகாரிகள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்...
ஆசிரியர் : இப்ராஹிம்
No comments:
Post a Comment