'மத்திய பல்கலையின் படிப்புகளில் சேர, ஜூன் 29ம் தேதி, கவுன்சிலிங் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மனிதவள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும், ஒன்பது இடங்களில் மத்திய பல்கலைகள் உள்ளன; தமிழகத்தில், திருவாரூரில் மத்திய பல்கலை உள்ளது.இந்த பல்கலையில் இளங்கலை படிப்பில் சேர, பிளஸ் 2; முதுகலை படிப்பில் சேர, இளங்கலை பட்டம் முடித்து, 'க்யூசெட்' எனப்படும், மத்திய பல்கலைக்கான நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். புதிய கல்வி ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு, மே, 21, 22ல் நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள், ஜூன் 17ம் தேதி வெளியாகும்.இந்நிலையில், 'ஜூன் 29ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கும்' என, மத்திய பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment