ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.சிபிசிஐடி ஏடிஜிபியாக கரண் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.தருமபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கவனிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment