பி.எப். அலுவலகங்களில் நடைமுறையில் இல்லாத கணக்குகளில் ரூ.43 ஆயிரம் கோடி உள்ளது: மத்திய மந்திரி பதில் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 9, 2016

பி.எப். அலுவலகங்களில் நடைமுறையில் இல்லாத கணக்குகளில் ரூ.43 ஆயிரம் கோடி உள்ளது: மத்திய மந்திரி பதில்

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி மற்றும் துணை கேள்விக்கு பதிலளித்த அவர், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களின் மூலம் கடந்த 2015-16 நிதியாண்டில் மட்டும் ஒரு கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமான முறையீடுகள் தீரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றில் 98 சதவீத முறையீடுகள் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது, ஒரு லட்சத்து 18 ஆயிரம் மனுக்கள்மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கேட்பாரற்று கிடக்கும் பணத்துக்கும் நடைமுறை செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணத்துக்குமான வித்தியாசம் தெரியாமல் சிலர் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பரிவர்த்தனைகள் நடைமுறையில் இல்லாத கணக்குகளில் மட்டும் 43 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பில் உள்ளதாக கூறினார்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களையும் இணைப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் இந்த திட்டத்தில் இணைக்கும் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் அட்டை அல்லது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான் கார்டு எண்) இணைத்திருக்கும் தொழிலாளர்கள், இனி தங்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருக்காமல் தங்களது பணத்தை கணக்கில் இருந்து எடுக்கும் வசதியும் செய்யப்ப

No comments:

Post a Comment