நாட்டின் முதல், பசுமை வழித் தடமாக, தமிழகத்தின் மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை அமைகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக வுள்ளது. இந்த பாதையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'பயோ - டாய்லெட்' வசதி முழுமையாக அமலுக்கு வருகிறது.
உலகின் மிகப்பெரிய ரயில்வேகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில், தற்போதுள்ள கழிப்பறை களை பயன்படுத்தும்போது, மலக்கழிவுகள்கீழே விழுந்து, ரயில் பாதையை அசுத்தப்படுகிறது.
இவ்வாறு ரயில் பாதையை அசுத்தம் செய்வதை தடுக்கும் வகையில், 'பயோ - டாய்லெட்' என்ற, சுற்றுச் சூழலை பாதிக்காத வசதி, சில ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அசுத்தமில்லாத...:ஆனால், நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு குறிப்பிட்ட வழித்தடம் முழுவதும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 114 கி.மீ., துாரமுள்ள மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே, இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, தற்போது சோதனை செய்யப்பட்டுவருகிறது.
இதன்படி, நாட்டிலேயே, அசுத்தம் இல்லாத, பசுமையான ரயில் பாதையாக, மானாமதுரை -
ராமேஸ்வரம் இடையேயான ரயில் பாதை விளங்கும். இந்த மாத இறுதியில், இதற்கான எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, இந்த மார்க்கத்தில் இயங்கும், 16 ரயில்களைத் தவிர, இடையில் உள்ள, 14 ரயில் நிலையங்களிலும் பயோ - டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த, 16 ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளிலும், பயோ - டாய்லெட் வசதி செய்யப்படுகிறது.
வாய்ப்பில்லை:இந்த முறையின்
கீழ், கழிப்பிடத்தில் சேரும் கழிவுகள், பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படும்; மேலும், கழிப்பிடத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் திரவக் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்பட்டு, அவை மட்டும் வெளியேற்றப்படுவதால், சுகாதார கேடு ஏற்படாது. ரயில் பாதையில், மலக் கழிவுகள் விழுவதற்கான வாய்ப்பே இருக்காது.
அடுத்தது எங்கே?: தமிழகத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக, குஜராத்தில், 141 கி.மீ., துாரமுள்ள கனாலஸ் - துவாரகா - ஓக்லா வழிதடத்திலும், 34 கி.மீ., துாரமுள்ள போர்பந்தர் - வான்ஸ்ஜால்யா வழிதடத்திலும் பயோ - டாய்லெட் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு - காத்ரா மார்க்கத்திலும் இந்த வசதி செய்யப்பட உள்ளது.தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும், பல்வேறு ரயில்களில், 20 ஆயிரம் பயோ - டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டுக்குள் மேலும், 17 ஆயிரம் பயோ - டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு பயோ - டாய்லெட் அமைக்க, 3.5 லட்சம் ரூபாய்செலவாகிறது.
இந்திய ரயில்வே - ஒரு பார்வை
* நாடு முழுவதும், 1,15,000 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை உள்ளது
*ஒட்டு மொத்தமாக, 7,112 ரயில்வே ஸ்டேஷன்கள்
உள்ளன
* புறநகர் ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களிலும், சராசரியாக, தினசரி 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர் முறையான அறிவிப்பு வெளியாகும் என *ரயில்களில், 66,392 பயணிகள் பெட்டிகள், 2,45,267 சரக்கு ரயில் பெட்டிகள் உள்ளன.
மரங்கள் நட திட்டம்: மத்திய அரசு துாய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்திய பின், அதை முறையாக செயல்படுத்துவதில் ரயில்வே முன்னிலையில் உள்ளது. தற்போது பயோ - டாய்லெட் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வரிசையில், ரயில் பாதைகளை ஒட்டியுள்ள ரயில்வேயின் இடங்களில், மாநில அரசுகளுடன் இணைந்து, மரங்களை நடுவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதைத் தவிர, ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிலப் பகுதிகளிலும் மரங்களை நடுவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment