சிறப்பான தேர்தல் பணிக்கு ஒரு சபாஷ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

சிறப்பான தேர்தல் பணிக்கு ஒரு சபாஷ்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பலரது அயராத பணியால் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

இது போல் ஆசிரியர்கள் & ஆசிரியைகள் என வாக்குச்சாவடிக்கென ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியை துரிதமாக மேற்கொண்டனர். பல ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு முந்தைய நாளே சென்று இங்கு பலர் கொசுக்கடியிலும் அவதிப்பட்டனர்.

தேர்தல் 6 மணிக்கு  முடிந்து வாக்கு பெட்டி எடுக்கும்  வரை ஆசிரிய பெருமக்கள் இருந்து வீட்டிற்கு மறுநாள் வந்து சேர்ந்தவர்களும் உண்டு.

பெண் ஆசிரியர்கள் இரவு 12 மணிக்கு கூட பள்ளிகள் விட்டு வெளியேறும் சூழலை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்துவதற்கு பின்னால் அத்தனை ஊழியர்கள் தங்களின் பங்களிப்பை ஜனநாயகத்தில் ஒரு பெருமையாக கருதுவதாக TTNews கருதுகிறது.

வெற்றிகரமாக தேர்தலை முடிக்க துணையாக நின்ற அனைவருக்கும் ஒரு சபாஷ் போடுவோமே.

No comments:

Post a Comment