சிவகங்கை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கையடக்க கணினிசிவகங்கை மாவட்டத்தில், 799 ரேஷன் கடைகளில், மூன்று லட்சத்து, 20 ஆயிரத்து, 754 கார்டுதாரர்கள் உள்ளனர். அனைத்து கார்டுதாரர்களின் அலைபேசி எண், ஆதார் எண், ரேஷன் கார்டு எண் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் அனைத்தும், ரேஷன் கடைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும், 'ஸ்மார்ட் கார்டை' ரேஷன் கடைகளில் கொடுத்தால் கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு, வழங்கப்படும் பொருட்கள் குறித்த விவரம், பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும்.
பொருட்கள் பதிவு செய்யப்பட்ட விவரம், சம்பந்தப்பட்ட கார்டு தாரர்களின் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும். மேலும், 'ஸ்மார்ட் கார்டு' கொண்டு வருபவர்களின் படம் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாமல் பொருட்கள் வினியோகம் செய்வது தடுக்கப்படும். திருப்புவனம் தாலுகாவில் உள்ள, 79 ரேஷன் கடைகளுக்கும் கணினி வழங்கப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இத்திட்டம், வரும் ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:இந்த திட்டம் சரியானது தான். இதன் மூலம் கள்ளத்தனமாக பொருட்கள் விற்பது தடுக்கப்படும். பின் தங்கிய கிராமப்புறங்களில், 'நெட்ஒர்க் சிக்னல்' கிடைப்பதில் சிரமம் இருக்கும். சிக்னல் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பொருட்களை வினியோகம் செய்ய முடியும்.
முறைப்படுத்தப்படும்:ஒரு கடைக்கு குறைந்தபட்சம், 1,000 கார்டுதாரர்கள் உள்ளனர். ஒரே ஒரு விற்பனையாளர் மூலம் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பதிவு செய்வது, பொருட்களை எடை பார்த்து வழங்குவது முடியாத காரியம். எனவே, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு, எடை குறைத்து தான் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. எனவே, இதையும் முறைப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் கார்டு முறையை நடைமுறைப்படுத்தும் போது, பொருட்கள் அனைத்தையும் பாக்கெட் போட்டு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment