ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் நேரம் தவறாமையை கடைபிடிக்க, தெற்கு ரயில்வேயில், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறை, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்கள்
செயல்படுகின்றன; இங்கு, பல்வேறு நிலைகளில், ஒரு லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர்.
தாமதமாக...இவர்களுக்கு, ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதத்தில், இரு முறை தாமதமாக பணிக்கு வர, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர், இதை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.இதைத் தவிர்க்க, நேரம் தவறாமையை அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆதார் எண்இது குறித்து, ரயில்வே உயரதிகாரி கள் கூறியதாவது:ஊழியர்கள் பலர், அலுவலகங்களுக்கு தொடர்ந்து தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக்' முறை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண் பெற்று, அதை அடிப்படையாகக் கொண்டு, 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பத்தில் வருகைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு ரயில்வே அலுவலகத்திலும், சென்னை கோட்ட அலுவலகங்களிலும் 'பயோமெட்ரிக்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விரைவில் விஸ்தரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment