இணையதள சேவைகள் வாக்காளர்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 8, 2016

இணையதள சேவைகள் வாக்காளர்கள் வரவேற்பு

வாக்காளர்களுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு இணையதள சேவைகளை, உருவாக்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, தமிழக தேர்தல் கமிஷன் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, எந்த ஓட்டுச் சாவடியில் தங்களுக்கு ஓட்டு உள்ளது என்பதை அறியலாம். முதியவர்கள் ஓட்டுச் சாவடியில், ஓட்டுப்போட செல்லும்போது, 'வீல் சேர்' தேவை என்றால், முன்பதிவு
செய்யலாம்.ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச் சாவடியில், எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல், மொபைல் எண் தெரிவித்துள்ள வாக்காளர்களுக்கு, அவர்களின் மொபைலில், எத்தனை வாக்காளர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்பதை தெரியப்படுத்தவும், தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
- நமது நிருபர்

No comments:

Post a Comment