அனைவரும் ஓட்டு அளிக்க வசதியாக, சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு நாளான, 16ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, சென்னை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குனர் பி.போஸ், நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கை:மக்கள் பிரதிநிதிச் சட்டத்தின் படியும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினரும், அவற்றில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும், தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான, 16ம் தேதி, ஓட்டளிக்கும் பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஓட்டு பேடுவதற்காகவே விடுமுறை; அனைவரும் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment