தேர்தல் பணியில் ஆசிரிய சமூகங்களின் வேதனை - பாகம் 4 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 18, 2016

தேர்தல் பணியில் ஆசிரிய சமூகங்களின் வேதனை - பாகம் 4

?தேர்தல் பணி முடிந்தது.p-2 பணிகள் குறைக்கப்படவேண்டும் அது தேர்தலை வேகமாக நடத்த உதவும் .ஒரு பூத்திற்கு 400 அல்லது 500 வாக்குகள் ஒதுக்குவது சிறந்தது .நான் சென்ற வாக்கு சாவடியில் 800 ஓட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்களித்தனர் .மிக கடினமான பணியாக இது அமைந்தது .கவர்கள் மற்றும் படிவங்கள் வெவ்வேறு கலர்களில் அச்சிட்டு ஒரு நிற படிவங்கள் ,அதே நிற கவர்களில் போடுமாறு இருந்தால்[எ.கா சிவப்பு நிற படிவங்கள் சிவப்பு நிற கவரில் ]என்பது போல அமைந்தால் சிறப்பாக இருக்கும் .இது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியை எளிதாக்கும் .தேர்தல் நடத்தி ஓய்ந்த பின் 4 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்து திண்டிவனம் வந்தபோது இரவு மணி 1.30 ...தேர்தல் ஆணையம் அலுவலர்களை அதிகப்படுத்தி 7 மணிக்குள் அனைத்து அலுவல்களையும் முடித்து அலுவலர்களை வாக்கு சாவடியிலிருந்து அவர்கள் ஊருக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் .நான் பணியாற்றிய வாக்குச்சாவடியில் பணியாற்றிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரரின் செயல் என்னை மயிர் கூச்செறிய வைத்தது அது என்னவென்றால் வாக்கு பதிவு முடிந்த பின்பு அழியாத மையை எடுத்து தன் விரலில் தானே வைத்து கொண்டார் .அவரின் நாட்டுப்பற்று தான் வாக்களிக்க முடியாத கவலை,ஜனநாயக ஆர்வம் இவைகளை கண்டு வியக்கிறேன்.மை வைத்த அடுத்த வினாடியே தலை எண்ணையில் விரல் வைத்து என்னை மீண்டும் மீண்டும் மை வைக்க வைத்த மக்களின் அறியாமை ,நெயில் பாலிஷ் பூசி வரும் பெண்கள் இவர்களை கண்டு வருத்தப்படுகிறேன்

ஆசிரியர்: ராஜேஷ் நரசிம்மன்

Sivakumar Arunachalam
தேர்தல் பணி முடித்து வீட்டிற்கு வரும்போது நள்ளிரவு மணி 2:00.
இன்னும் சில நண்பர்கள் (பெண்கள் உட்பட ) விடிந்த பின்புதான் வீட்டிற்கு செல்லும் அவல நிலை .
3 1/2 மணிநேர பேருந்து பயணம்
இந்நிலை மாறுமா?
போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கப்போராளிகளே ஆசிரியர்களின் துயர்துடைக்க களம் காணுங்கள் .

No comments:

Post a Comment