பேசும்போது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ‘டிராய்’ உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.டிராய் உத்தரவு
தனியார் செல்போன் நிறுவனங்கள் பலவற்றில் பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென இணைப்புகள் துண்டிக்கப்படுவது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வாக உள்ளது. அதுவும் கடந்த ஆண்டு இப்படி இணைப்பு துண்டிக்கப்படுவது பெரும்பாலான செல்போன் நிறுவனங்களில் அடிக்கடி நடந்தது.இதையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய சில நிபந்தனைகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘‘பாதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்கு இழப்பீடாக செல்போன் உபயோகிப்பாளருக்கு ஒரு அழைப்புக்கு குறைந்த பட்சமாக 1 ரூபாயும், அதிகபட்சமாக 3 ரூபாயும் இழப்பீடு வழங்கவேண்டும். இதுகுறித்த விவரத்தை 4 மணி நேரத்துக்குள் உபயோகிப்பாளருக்கு குறும் செய்தியாக அனுப்பி வைக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு 2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட்டு ரத்துடிராயின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் செல்போன் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், செல்போன் உபயோகிப்பாளர் நலன் கருதி டிராயின் இழப்பீட்டு கொள்கை விவகாரத்தில் தலையிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் மறுத்து விட்டது.இதைத்தொடர்ந்து, செல்போன் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன. இந்த மனுவை நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து முடித்து கடந்த 3–ந்தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது டிராய் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், ‘‘டிராயின் உத்தரவு, தன்னிச்சையானது, நியாயமற்றது, வெளிப்படைதன்மை இல்லாதது’’ என்றனர்.மந்திரி கேள்வி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து டிராய் முடிவு செய்யும். அதேநேரம் செல்போன் நிறுவனங்கள், கட்டாயம் தங்களது சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும். நாட்டில் மூலை முடுக்குதோறும் சேவையை செல்போன் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யும்போது தரத்தை மட்டும் ஏன் உயர்த்தக் கூடாது’’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment