நாளை (இன்று) (2.4.17 ) போலியோ சொட்டு மருந்து முகாம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 1, 2017

நாளை (இன்று) (2.4.17 ) போலியோ சொட்டு மருந்து முகாம்!

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 
கூறப்பட்டுள்ளதாவது:– தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளையும்,  இரண்டாம் தவணை 30–ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளன. 

நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப்  பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள்  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment