தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த அதிரடித் திட்டம் பாடத் திட்டத்தை மாற்றுவது. இது தொடர்பான பணிகளில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களை உட்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கோத்தாரி குழுவின் அறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் ஆழ்ந்த அறிவு உள்ளவர்களைப் புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான பணிகளில் பங்கேற்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர்நாளை முதல் 23-ஆம் தேதி வரை தங்கள் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட மாற்றப் பணிகளில் பங்குபெற www.tnscert.org என்ற இணையதளத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்யலாம் என அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சமீப காலமாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் ரேங்கிங் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டது. 3 வண்ணங்களில் பள்ளிச் சீருடை மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பில் நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இனி 600 மார்க்குக்கு மட்டுமே தேர்வு. தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடத்திட்டங்களையும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
x
No comments:
Post a Comment