66 பொருட்கள் மீதான வரிவிகிதத்தில் மாற்றம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 11, 2017

66 பொருட்கள் மீதான வரிவிகிதத்தில் மாற்றம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு

ரூ.100-க்கும் அதிகம் விலையுள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% அதற்கும் கீழே உள்ள டிக்கெட்டுகளுக்கு 18% வரி என்று ஜிஎஸ்டி கவுன்சில் வரிவிகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய
வரிவிகித முடிவுகள் எடுக்கப்பட்டன.
கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் மீதான வரி விகிதம் 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இன்சுலின், அகர்பத்திகள், ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு, பள்ளிப் பைகளுக்கான வரி 28% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 133 பொருட்களுக்கு கருத்துக்கள் பெறப்பட்டன. அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு 66 பொருட்கள் மீதான வரிவிகிதம் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதில் முந்திரி மீதான வரி 12% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் ஜூன் 18-ம் தேதி அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் லாட்டரி டிக்கெட்டுகள், இ-வழி பில்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி விகிதம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஹைபிரிட் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியின் மீதான மறுபரிசீலனை விவகாரத்தில் மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment