திருவண்ணாமலையில் பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 6, 2017

திருவண்ணாமலையில் பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் எவ்வித மாற்றமும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை மாவட்ட ஆட்சியர், "கடும் வெயில் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என அறிவித்தார்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை ஜூன் 7-ம் தேதி திறக்கப்படுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டிவருவதால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் என அனைதுப் பள்ளிகளும் வரும் 15-ம் தேதி திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே பழைய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருவண்ணாமலையில் பள்ளி திறப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்தார்.

பள்ளி திறப்பு தொடர்பாக இருவேறு தகவல்கள் வெளியானதால் அம்மாவட்ட மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

சென்னையில் நாளை திறப்பு..

சென்னையில் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நிலவும் வெப்பத்துக்கு ஏற்ப பள்ளிகளை நாளை திறப்பதா இல்லை வேறு ஒரு நாளுக்கு தள்ளிவப்பதா என்ற முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து அறிவிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment