சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 13, 2017

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட்

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட்
இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்தபடிப்புகளில் உதவிப் பேராசிரியர் ஆவதற்கான ‘நெட்’ தகுதித்தேர்வை சிஎஸ்ஐஆர் அமைப்பு ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தி வருகிறது. 
இந்த ஆண்டுக்கான முதலாவது ‘நெட்’ தேர்வு ஜூன் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் மொத்தம் 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.‘நெட்’ தேர்வுக்கு வி்ண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணமும் அத்தகைய விண்ணப்பதாரர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது

No comments:

Post a Comment