அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 16, 2017

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..

புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016
7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும்.
பகுதி நேர பொறுப்பாசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மழை வருவதற்கு முன்பு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார நடவடிக் கை எடுக்க வேண்டும்’ என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, ‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார். அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும் போது, ‘வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.16 கோடிக்கான வேலை நடந்து முடிந்துள்ளது. மழை வருவதற்குள் மீண்டும் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment