மருத்துவ மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 18, 2017

மருத்துவ மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும், 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள், இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், விரைவில் வர உள்ளன.'நீட்' தேர்வில், மத்திய பாடத்திட்ட மாணவர்கள், 'ரேங்க்' பட்டியலில் அதிகளவில் முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக, தமிழக அரசு கருதுகிறது.

இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடும். எனவே, 'நீட்' தேர்வுஅடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட நிபுணர்களுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகும்'

No comments:

Post a Comment