பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 16, 2017

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment