உலக அளவில் உடல் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக உடற்பருமன் உள்ள குழந்தைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது
கடந்த 40 ஆண்டுகளில் அதிக உடற்பருமன் உள்ள குழந்தைகள், பதின்ம வயதினரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் உள்ள ஆசிய நாடுகளில் இவ்வாறு உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த இம்பீரியல் ஹெல்த் ஆஃப் பப்ளிக் ஸ்கூலின் மாஜித் எஸாட்டி கூறும்போது, “40 ஆண்டுகளில் 11 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக அதி உடற்பருமன் குழந்தைகள், பதின்மவயதினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.
அதாவது, சிறுவர்களில் 8%, சிறுமிகளில் 6% 2016-ல் அதி உடற்பருமன் அடைந்தவர்களாக உள்ளனர்.
கடந்த ஆண்டில் கூடுதலாக 5 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்கள் 213 மில்லியன் பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அதி உடற்பருமனால் நீரிழிவு, இருதய நோய்கள், மற்றும் புற்று நோய்கள் வரலாம் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. டப்பாக்களில் அடைக்கப்படும் உணவுபொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டால் நுகர்வோர் தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் உணர்கிறார்கள்.
துரித உணவு வகைகளில் ஜங்க் புட் உருப்படிகளுக்கு அதிக வரிவிதிப்பு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை பயனளிக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இனிப்பு வகை பானங்களுக்கு 20% வரி விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தென் ஆப்பிரிக்கா, எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகளில் அதி உடற்பருமன் காணப்படுவதில்லை, ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்த நிலை தற்போது மாறிவிட்டது. பெண்களில் அதிகம் பேர் உடற்பருமன் அதிகம் உடையவர்களாக தற்போது உள்ளனர்.
கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் தீவுகள் ஆய்வு அனுபவம் உரைப்பது என்னவெனில் தேவையான எடைக்கும் குறைவான நிலையிலிருந்து அதிக உடல் எடை என்ற நிலைக்கு படுவேகமாக முன்னேறி வருகிறது என்பதே.
பள்ளி நாட்களில் உடற்பயிற்சி என்பதே குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விட்டது, பல பள்ளிகளில் உணவுகள் சரியாக இருப்பதில்லை, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சைக்கிளில் செல்வது பலநாடுகளில் குறைந்திருக்கிறது என்றால் இன்னும் பல நாடுகளில் இது ஆபத்தானதாகவும் அமைந்துள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. அதிபதனீட்டு உணவுகள் எளிதில் கிடைக்கின்றன, இவற்றுக்கு பெரிய அளவு விளம்பரங்கள் செய்யப்படுகிறது, அனைத்திற்கும் மேலாக இவை விலை குறைவாகவும் உள்ளன, இதனால் இதில் போய் மக்கள் விழுகின்றனர் என்கிறது உலகச் சுகாதார மையம்.
No comments:
Post a Comment