ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 12, 2017

ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்

தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.
அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற முடியும்.

No comments:

Post a Comment