ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 178 பொருட்களுக்கு வரிகுறைப்பு; அனைத்து உணவு விடுதிகளுக்கும் சீராக 5% வரி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 10, 2017

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 178 பொருட்களுக்கு வரிகுறைப்பு; அனைத்து உணவு விடுதிகளுக்கும் சீராக 5% வரி

28% ஜிஎஸ்டி வரிப்பிரிவில் இருந்த பொருட்களில் 178 பொருட்களுக்கான வரி 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனை வெள்ளியன்று
நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் அருண் ஜேட்லி அறிவித்தார்.
துணி துவைக்கும் சோப்பு, மார்பிள், குளியலறைப் பொருட்கள் உள்ளிட்டவை 18% வரி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
13 பொருட்கள் மீதான 18% வரிவிதிப்ப்பு 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. 5 பொருட்கள் மீதான 18% வரிவிதிப்பு 5%ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
6 பொருட்கள் மீதான 5% வரி முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.
உணவு விடுதிகளுக்கு உள்ளீட்டு வரிக் கடன் கிடையாது. ஏ/சி மற்றும் ஏ/சி அல்லாத உணவு விடுதிகள் அனைத்திற்கும் சீராக 5% வரி என்று குறைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவு விடுதிகள் 18% வரிப்பிரிவின் கீழ் உள்ளது, இந்தப் பிரிவில் உள்ளீட்டு வரிக் கடன் உண்டு.

No comments:

Post a Comment