தொடர் மழை காரணமாக அண்ணா
கடந்த ஐந்து நாட்களாக வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாகச் சென்னையில் அதிக அளவில் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 2015இல் ஏற்பட்டதைப் போல் பெருவெள்ளப் பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் சென்னை மக்கள்.
இந்நிலையில், “தொடர் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும்” என்று பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் செய்தியாளர்களிடம், இன்று (நவ. 4) தெரிவித்திருக்கிறார்.

No comments:
Post a Comment