24ல் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ-ஜியோ மீண்டும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் 12லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 வது சம்பளக்கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ-ஜியோ ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் ஆகஸ்ட் 26 மற்றும் 27ம் தேதிகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதிய ஊதிய விகிதங்களை அரசு அறிவித்தது. இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில்உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். இதை வலியுறுத்தி 24ம்தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி உயர்மட்டக் குழு கூடி ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கும்என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment