மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 2, 2017

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு!!!

பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில்
இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்விசார் ஆவணங்களிலும், மாணவர்களின் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. உதவித்தொகை திட்டங்கள், இலவச திட்டங்களுக்கு கூட, மாணவர்களின் அடையாள எண்ணாக, ஆதார் எண் குறிப்பிடப்படுகிறது.

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, தகவல்கள் முழுமையடைகின்றன. எனவே, ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண் பெறுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இயக்குனரின் சுற்றறிக்கை, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடுவோரின் விபரங்களில், ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களின் பெற்றோரிடம் கூறி, விரைவில் பெற்று, ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம்’ என்றனர்.

No comments:

Post a Comment