திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 15, 2017

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது.இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரைநடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன.

திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி,நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்குகளுக்கும், எந்ததொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment