சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி
மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"ஆண்டுதோறும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்புச் செய்வதற்காக, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இவ்விருதைப் பெறுபவருக்கு, ரூபாய் 1 லட்சம் பொற்கிழி மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருகிறது.
2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு, உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் பூர்த்திசெய்து 10.11.2017-க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment