அல்ட்ரா மாடர்னாக மாறும் இந்திய ரயில்கள்!!!
இந்தியன் ரயில்வேயின் கீழ் இயங்கும் 30 ரயில்கள், 15 சதாப்தி
வண்டிகள் மற்றும் 15 ராஜ்தானி ரயில்கள் ஸ்வர்ன் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகின்றன.
முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் காலத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, கோல்டன் ஸ்டாண்டர்டு எனப்படும் மிக உயர்ந்த தரத்திற்கு ரயில்கள் மாற்றப்படும். இதில், ஏராளமான ஹைடெக் வசதிகள் இடம்பெறவுள்ளன. அந்தந்த மாநிலங்களுக்கே உரிய கலை அம்சங்கள் ரயில்களில் சேர்க்கப்படும். புதுப்பிக்கப்பட்ட ரயில்கள் 'ஸ்வர்ன் ரயில்கள்' (தங்கத் தரநிலை) என அழைக்கப்படும்.
ரயில்களில் இடம்பெறக் கூடிய அசம்சங்கள் பின்வருமாறு,
பொழுதுபோக்குச் சாதனங்கள்.
உணவு பரிமாறும் சேவைகளுக்காக பிரத்யேக டிராலி.
அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா மற்றும் கூடுதலாக ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள்.
ரயில்களில் உட்புறங்களில் துடிப்பான வினைல் கோட்டிங் பூச்சுகள்.
இருட்டிலும் தெரியும் வண்ணம் ஒளிரக்கூடிய குறிப்புப் பட்டைகள்.
கழிவறைகளில் குப்பைத் தொட்டிகள், பிரத்யேக உறைகள்.
அனைத்துப் பெட்டிகளிலும் நறுமண வசதிகள், சுகாதாரக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள்.
அனைத்துப் பெட்டிகளிலும் பார்வையற்றோருக்கு வழிகாட்டும் குறிப்பேடுகள்.
அதிவேக வைஃபை வசதி.
No comments:
Post a Comment