பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 23, 2017

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி, செய்முறை தேர்வு, அகமதிப்பீட்டு முறை, தேர்வுக்கான மொத்த மதிப்பெண் ஆகியவை குறித்து, ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, முதன்மை விடைத்தாள்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு, 30 பக்கங்களில் கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும். உயிரியலில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண்களுக்கு, தனித்தனியாக எழுத, தலா, 22 பக்கங்களில், இரண்டு முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும்.

கணக்கியல் என்ற அக்கவுன்டன்சி பாடத்துக்கு, 90 மதிப்பெண்களுக்கு, தலா, 15 பக்கங்கள் கோடிட்டும், கோடிடப்படாமலும், மொத்தம், 30 பக்கங்கள் வழங்கப்படும். கணினி அறிவியல் உள்பட மற்ற பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கோடிடப்படாமல் வழங்கப்படும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment