வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் 300 தனியார் பொறியியல் கல்லுரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 2, 2017

வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் 300 தனியார் பொறியியல் கல்லுரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு

வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் 300 தனியார் பொறியியல் கல்லுரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு
கடந்த 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்  முடிவு செய்துள்ளது. 
இதன் அடிப்படையில்  இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 13.56 லட்சம் மாணவர்கள் படிக்க முடியும் என்றும்  இக்கல்லூரிகளை ஆய்வு செய்த போது, 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்ந்ததால், அடுத்த 2018 - 19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்பட தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும்  அக்கல்லூரிகளை கலை அறிவியல் அல்லது தொழில்படிப்பு கல்லூரிகளாக மாற்றி கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். அதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூட மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றும்  500 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால், அது குறித்து ஆய்வு நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment