சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில்
2017-18-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள் டிசம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புக ளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படும் ஒற்றைச்சாளர மையத்தின் மூலமாகவும் மாணவர்கள் நேரடியாக சேரலாம். மேலும், கீழ்க்காணும் இணையதளங்களை பயன்படுத்தி ஆன் லைன் மூலமாகவும் சேரலாம். www.ideunom.ac.in
No comments:
Post a Comment