பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில்பணியாற்றுகின்றனர்.
இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார்
No comments:
Post a Comment