தமிழ்நாடு மின் வாரியத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்தடை குறித்த தகவல்கள் பெறுவது உள்ளிட்ட சேவைகளுக்கு நுகர்வோர்கள் மின் வாரியத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை, சுமார் 3 கோடி பேருக்கும் மேல் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு உள்ள னர்.அத்துடன், மின் நிலையம், துணை மின் நிலையம் கட்டுவது தொடர்பாக டெண்டர்கள் இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. ஆனால், மின் வாரிய இணையதள சர்வர் குறைந்த வேகத்தில் செயல்பட்டதால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தியவர்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற முடியும்என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment