'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 24, 2017

'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'

''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:மேல்நிலை கல்வி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள மாநில அளவில் 412 மையங்கள் செயல் படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, 100 மையங்கள் செயல்படுகின்றன. மீதி 312 மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்.இதற்காக, பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு தேசிய அளவிலும், 17 நாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment