அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத்
திட்டத்தின் கீழ், தனிநபர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வட்டி அடிப்படையில் மாதந்தோறும் குறிப்பிட்ட வருவாய் பெறும் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதில் வருமான வரிச் சலுகைகள் எதுவும் கிடையாது. ஓய்வூதியம் மற்றும் நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு இத்திட்டம் மிகச்சிறந்த திட்டமாகும்.
இத்திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்குக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம். எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் ஒருவர் பல்வேறு கணக்குகள் வைத்துக்கொள்ளலாம். மேலும், வைப்புத் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 7.5 சதவிகித வட்டியில் மாத வருவாய் பெறலாம். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சமும் டெபாசிட் செய்யலாம்.
இத்திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்திற்கு முன்னரும் கணக்கை முடித்துக்கொள்ளலாம். ஆனால், அதற்குக் குறிப்பிட்ட தொகை அஞ்சல் அலுவலகத்தால் பிடித்தம் செய்யப்படும். அதாவது, 1 முதல் 3 வருடங்களுக்கு இடையில் கணக்கை முடித்துக்கொண்டால் 2 சதவிகிதமும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொண்டால் 1 சதவிகிதமும் பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள தொகையே வைப்பாளருக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment