பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 16, 2017

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு
'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும். இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள்திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியேகணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது.




No comments:

Post a Comment