மீண்டும், 'ரேங்கிங்' : சி.பி.எஸ்.இ., அறிமுகம்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 15, 2017

மீண்டும், 'ரேங்கிங்' : சி.பி.எஸ்.இ., அறிமுகம்!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
இந்த ஆண்டு முதல், தேசிய அளவில், 'ரேங்கிங்' முறை அறிமுகமாகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்கள், தேசிய அளவில், முதல் மூன்று, 'ரேங்க்' பெறுவர்.

இந்நிலையில், 2009 முதல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
அதாவது, சி.சி.இ., எனப்படும், தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, பள்ளிகளிலேயே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, படிநிலை என்ற, 'கிரேடு' முறை அறிமுகம் ஆனது. இதற்கிடையில், பொது தேர்வு இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வழங்கி, பிளஸ் 1க்கு தேர்ச்சி பெற வைப்பதாக, புகார் எழுந்தது. அதனால், கல்வித் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசின் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது.ஆய்வு அறிக்கையின்படி, 10ம் வகுப்புக்கு, மீண்டும் தேசிய அளவில் பொது தேர்வு வந்துள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் மார்ச்சில், பொது தேர்வை எழுத வேண்டும். அதன் முடிவுகள், மே மாதம் வெளியாகும். இந்த முடிவுகளில், மீண்டும் மதிப்பெண் முறையும், தரவரிசை என்ற, 'ரேங்கிங்' முறையும் வர உள்ளது.

No comments:

Post a Comment