பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை உடனடியாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றன. இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்வு எழுதினர். நாளை காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முடிவுகள் அனைத்து பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது. இதனை பதிவிரக்கம் செய்து வெளியிட வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை உடனடியாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும் தேர்வுத்துறை இணையதளங்களிலும் முடிவுகள் வெளியாகின்றன.
No comments:
Post a Comment