தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 3, 2018

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றம்

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ
சென்னை: நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்துக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது.

சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில்தான் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது, ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.

தற்போது இதில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து இருக்கிறது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயண செலவு தொடங்கி தங்கும் செலவு வரை, ஏழை மாணவர்கள்தான் சொந்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment