கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: ஜூன் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 7, 2018

கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: ஜூன் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: ஜூன் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
கூட்டுறவுசங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இரு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு தடை விதித்தது.
மேலும் கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இந்நிலையில் இதுதொடர்பான கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், ஜூன் இறுதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு விதித்த தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment