மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம்தேதி நடைபெறவுள்ளது
இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது
அதன் விவரம்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவில் விளையாட்டு போட்டியை கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறது
நிகழாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்காவில் நடைபெறவுள்ளது
இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை "எண்-10, 4-ஆவது குறுக்கு தெரு, பாலாஜி நகர்*
*ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032 என்ற முகவரி மூலமாகவும்*
*www.tndfctrust.com* *என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பெற்றுக் கொள்ளலாம்
மேலும், 044-22251584 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பிப்ரவரி 10-ஆம்தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
இந்தப் போட்டியை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, எஸ்பிஎல்டி நிறுவனம் மற்றும் சென்னை ரோட்டரி கிளப், இன்டஸ்ட்ரியல் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகிறது
மேலும் விவரங்களுக்கு 9566116271, 9840433964 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment