கோரிக்கைகளின் தோல்விக்கு ஆளும் அரசை காரணம் சொல்வதெல்லாம் பொய் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 23, 2019

கோரிக்கைகளின் தோல்விக்கு ஆளும் அரசை காரணம் சொல்வதெல்லாம் பொய்

*இனமான ஆசிரியர்களே.....!*

*இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிக்கு பணி இறக்கம்*

*பள்ளிகள் ஒன்றிணைப்பு*

*CPS ஐ ரத்து செய்ய இயலாது*

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பணி இறக்கம்*

*பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி இறக்கம்*

*தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் அடியோடு ஒழிப்பு*

        _இதற்கு காரணம் யார்?_

*ஆசிரியர்களாகிய நாம் தான்*

     *இப்போதுக்கூட  இந்த விஷயங்களெல்லாம் ஆசிரியர்களிடம் முழுமையாக போய் சேர்ந்து,சமகால எதிர்கால அபாயம் பற்றிய புரிதலை உருவாக்கி,அப்புரிதல்  அரசுக்கு எதிரானக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறதா என்பது சந்தேகம்தான்.*

       _சமீபகால வருடங்களாக கோரிக்கைகளின் தோல்விக்கு ஆளும் அரசை காரணம் சொல்வதெல்லாம் பொய்யாகவே தெரிகிறது._

      *இடைநிலை ஆசிரியர்களுக்காக போராடும்போது மற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது. ஏன் இடைநிலை ஆசிரியரே கலந்து கொள்ளாமல் இருப்பது?*

_CPS க்காக போராடும்போது CPS ஆசிரியரே போட்டி போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வது._

*இதெல்லாம்தான் இதற்கு காரணங்கள்.*

*தனக்கு வரும் வரை எல்லாம் வேடிக்கை தான்*.

இப்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசாங்கம் *ஆப்பு* வைத்துள்ளது.

*மழலையர் பள்ளி யாருக்கான பிரச்சினையாக பார்க்க வேண்டியுள்ளது......*

   1. _அங்கன்வாடி ஊழியர்களுக்கானதும் கூட.....ஒரே மையத்தில் நாமும்,அவரும் பணி புரிந்தால் அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்?நம் மனநிலை என்னவாக இருக்கும்?_

   2. _ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கானது.....சீனியர்,ஜுனியர் என்றெல்லாம் இல்லை.மழலையர் பள்ளிக்குச் செல்பவர்கள் அதற்கான சிறப்பு பயிற்சிகள் கொடுப்பதால் ஆசிரியர் பொதுமாறுதலில் கலந்துக்கொள்ளக்கூடாது என்ற நெறிமுறையும் வந்துள்ளது.அப்படி அணுகும்போது மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கென்று தனி கலந்தாய்வு நடக்கும்நிலைக்கூட எதிர்காலத்தில் உருவாக்கியுள்ளது_ *களச்சுயநலம்*.

   _ஒரே நேரத்தில் பத்துப் பள்ளிக்கான மழலையர் பள்ளியைத் தொடங்கும்போது பத்து ஆசிரியர்களை அதற்கு ஒதுக்கீடு செய்யும்போது,ஜீனியராக உள்ளவர்களுக்கு Main place ல் மழலையர் பள்ளிக்கும்,சீனியராக உள்ளவர்களுக்கு Interior மழலையர் பள்ளிக்கும் போட்டுள்ளதாகவும்,இதை சரிசெய்ய வேண்டும் என்று நம்மவர்களே சொல்வதற்கான சூழலை உருவாக்கிவிட்டுள்ளது இந்த_ *களச்சுயநலம்*.

     _நான் பணிபுரியும் பள்ளியிலேயே அங்கன்வாடி தொடங்கட்டும்.அதில் பணிபுரிகிறேன் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது_ *களச்சுயநலம்*.

    _ஆரம்பத்தில் 4.1.2019 அன்று இது சம்பந்தமான இயக்குநரின் வழிகாட்டுதல் வந்தபோது பெண் ஆசிரியர்களை மட்டும் ஏன் போட வேண்டும்.ஆண் ஆசிரியர்களையும் போடச் சொல்ல வேண்டியதுதானே என்று பாலினச் சமத்துவம் பேச வைத்தது இந்த மழலையர் பள்ளி பிரச்சினை.ஆனால் போராட்டங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களாக இருப்பதால் வீட்டில் ஆண்கள் சம்மதம் கொடுக்க மாட்டார்கள் என்றும்,குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்றும்,ஒட்டுமொத்தச் சூழலையும் நம்பெண்காள் காரணமாகச் சொல்வதைத் தற்போதுவரை தவிர்க்க முடிவதில்லை.பெண்கள் இந்தப்பணிநிலைக்கு அதிகாமாக வந்ததால்தான்  அவர்காளின் சுயநலக் காரணங்களால்தான் எங்கள் கோரிக்கைகள் வெற்றிப்பெறுவதில்லை என்று அவர்கள் ஆண்கள் தவறில்லைதான்._

      _முழுமையாக பெண்களாகப் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் நம்மவர்கள்போல சொல்ல முடியாது._

   _முழுமையாக நம் வருமானத்தை அனுபவிக்கும் நம் குடுபத்தினருக்கு நம் இழப்பை புரியவைத்து களத்திற்கு வரமுடியவில்லையென்றால் சம்பந்தமேயில்லாத அரசு நம் இழப்பை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய_  *களச்சுயநலம்*.

      3. _ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான_ _முன்னுரிமைப்பட்டியலில்_ _உள்ளவர்களுக்கானதும் கூட....._  _இந்த உபரி தொடருமாயின்_
_பதவி உயர்வுக்கான வாய்ப்பை அவசியம் கொடுக்காது இந்த_   *களச்சுயநலம்.*

     4. _ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்குமானதும் கூட..... ஈராசியர் பள்ளியில்_
Below 10
Below 11
Below  12....
_இப்படி எடுக்க ஆரம்பித்தால் அனைத்துப்பள்ளிகளும் ஓராசிரியர் பள்ளியாக மாறி பள்ளி மூடப்பட்டு இறுதியில் ஜீனியராக இருக்கும் தலைமையாசிரியர்கள் இடைநிலை ஆசிரியராக தரமிறக்கி உபரியாக்கப்பட்டு மழலையர் பள்ளிக்குச் செல்லும் நிலையை உருவாக்கி கொடுத்துவிடும் இந்த_  *களச்சுயநலம்.*

  _ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருந்தாலும் உயர்நிலைப்பள்ளியாக்கப்பட்டு அத்துடன் ஆரம்பப்பள்ளியை இணைக்கும்போது ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியரின் நிலை....?_

    5. _பட்டதாரிகளுக்கானதும் கூட.... நிறைய மாவட்டங்களில் பட்டதாரிகளை உபரி எடுத்து ஆரம்பப்பள்ளிகளில் மாற்றுப்பணி கொடுத்துள்ள அவலம்....வேலையை தக்க வைத்துக் கொண்டாலே போதுமென்ற மனநிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும் இந்த_ *களச்சுயநலம்*.

     6. _நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கானதும் கூட.....ஆரம்பநிலை மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவென்றாலும்  பாடங்களின் எண்ணிக்கை குறையாதபோது பள்ளியை நிர்வகிக்க வேண்டிய நிலையில் மன நெருக்கடியைக் கொடுத்துவிடுகிறது இந்த_  *களச்சுயநலம்*

     _இந்த களச்சுயநலமே 2009 க்குப் பிறகான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளின் வெற்றியை காலம்தாழ்த்திக்கொண்டேச் செல்கிறது.உண்மையை மனசாட்சியோடு அணுகினால் 2009 க்கு முந்தைய கோரிக்கைகளின் போராட்டங்கள் வெற்றியே.அதற்கு பிறகான பணியில் சேர்ந்தவர்களின் களப்பங்கேற்பின் குறைவினாலேயே இத்தொய்வு என்பது புரியும்._

    *மழலையர் பள்ளி அதைவிடக்கூடுதல் மனநெருக்கடியாக மாறியுள்ளது.அரசு  வேலையை தக்க வைத்துக் கொண்டாலே போதுமானது ஏன்ற நெருக்கடி மனநிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.இதையும் பத்து வருடத்திற்கு பிறகு சீரியஸாக அணுகுவதைவிட தற்போதாவது களச்சுயநலம் தவிர்த்து அனைவரும் அனைவரின் நலனுக்காகவும் முழுமையாகக் களத்தில் பங்கெடுப்போமாக......!*

     *பொருளாதாரக் குவியல்,சுயநலம், மட்டுமே களத்திற்கு வராததற்கான தொடர் காரணங்களாக அமையுமாயின் அடுத்த தலைமுறைகளுக்கு வழிவிடுவதே அனைவரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்......*

      *நாம் அனுபவித்த உரிமைகளை,சமகாலம் மற்றும்  எதிர்காலத்தில் இப்பணிநிலைக்கு வருபவர்களுக்கு அப்படியேக்கொடுப்பது இப்பணிநிலையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்குமான வரலாற்றுக் கடமையும் கூட....*

No comments:

Post a Comment