போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் வழக்கு கூறப்பட்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் , அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, போராட்டம் நடத்தி வரும் அரசுப்பபள்ளி ஆசிரியர்கள் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment