100 சதவீதம் தேர்ச்சி கட்டாயம்:அரசு பள்ளிகளுக்கு அறிவுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 13, 2019

100 சதவீதம் தேர்ச்சி கட்டாயம்:அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

பொதுத்தேர்வில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று தர வேண்டியது, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் கடமை' என, திருத்தணியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்

திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரையாண்டு தேர்வில், சில பள்ளிகள், 80 சதவீதம் கீழ் தேர்ச்சி பெற்று உள்ளன

இதையடுத்து, அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று நடந்தது

இதில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது

தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணம் என்ன என, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.பாடம் எடுக்கும் ஆசிரியர்களிடம், மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருக்கும், மாணவர் பெயர்களை பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்

இது தவிர, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், 1 மணி நேரம், சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும்

நடத்திய பாடங்களுக்கு மாதிரி தேர்வு வைத்து, மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க வேண்டும்

வரும் அரசு பொதுத்தேர்வில், அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று, பள்ளி, 100 சதவீதம் பெற செய்ய வேண்டும்.கடமைஅதற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்கள்,கடினமாக உழைப்பு வேண்டும்

அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சிக்கான உத்திகளை கண்டறிந்து, தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசியர்களின் கடமை

இவ்வாறு அவர் பேசினார்.தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமைஆசிரியர், பாட ஆசிரியர்களிடம் காரணம் கேட்டு முதன்மை கல்விஅலுவலர் அறிந்தார்

No comments:

Post a Comment